பொது செய்தி

தமிழ்நாடு

பேராயுதம்! 3.18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டாச்சு...நூறு சதவீத இலக்கை அடைய கணக்கெடுப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை பகுதிகளில், நேற்று வரை, 3.18 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களை கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்த, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் பேராயுதமாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஓட்டுச்சாவடிகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டும், 5 சிறப்பு தடுப்பூசி

உடுமலை : உடுமலை பகுதிகளில், நேற்று வரை, 3.18 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களை கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்த, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் பேராயுதமாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஓட்டுச்சாவடிகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டும், 5 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலமும், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில், நேற்று வரை, 15 லட்சத்து,96 ஆயிரத்து, 175 பேர் முதல் தவணையும், இரண்டாம் தவணை தடுப்பூசி, 4 லட்சத்து, 69 ஆயிரத்து, 966 பேரும் செலுத்தியுள்ளனர். இதில், ஆண்கள், 10 லட்சத்து, 78 ஆயிரத்து, 303 பேரும், 9 லட்சத்து, 87 ஆயிரத்து, 495 பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதில், 18 முதல் 44 வயதிற்குட்பட்டோர், 12.45 லட்சம் பேரும், 45-60 வயதிற்குட்பட்டோர், 5.34 லட்சம்; 60 வயதிற்கு மேற்பட்டோர், 2.85 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.உடுமலை பகுதியில், உடுமலை நகர பகுதியில், 50 ஆயிரம் பேருக்கும், ஒன்றிய பகுதியில், 1.13 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றிய சுகாதார நிலையம், 69 ஆயிரம் பேருக்கும், மடத்துக்குளம் ஒன்றியத்தில், 40 ஆயிரம் பேர் மற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பணி செய்யும் இடங்கள், தொழிற்சாலைகள் என, 31 மையங்களில், நேற்று வரை, 3 லட்சத்து, 18 ஆயிரத்து, 242 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை நகரம் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்துள்ளது.இதனால், 18 வயதிற்கு மேற்பட்டோர் எண்ணிக்கையில், 80 சதவீதம் வரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில், பெண்களை விட, ஆண்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். கடந்த, 5 முகாம்கள் மூலம், அதிக பட்ச தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மேலும், போதிய அளவு தடுப்பூசி இருப்பும் உள்ளது. நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து, சுகாதாரத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மீதம் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.இவ்வாறு, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X