சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தல்

Added : அக் 14, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது.மாவட்ட தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். செயலாளர் ஜோசப் சேவியர் முன்னிலை வகித்தனர்.'உயர்கல்வி படிக்கும் மற்றும் படித்து முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரவல் காரணமாக 5 ஆண்டுகளாக நடத்தாத ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும்.

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது.மாவட்ட தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். செயலாளர் ஜோசப் சேவியர் முன்னிலை வகித்தனர்.

'உயர்கல்வி படிக்கும் மற்றும் படித்து முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரவல் காரணமாக 5 ஆண்டுகளாக நடத்தாத ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும். சனிக்கிழமை வேலை நாள், மாலை நேர சிறப்பு வகுப்புகளால் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.அதனால் சனிக்கிழமை விடுமுறை அறிவித்து சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினர். பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X