பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய தபால் வார விழா சிறப்பு உறை வெளியீடு

Added : அக் 14, 2021
Share
Advertisement
மதுரை :தபால் துறை தேசிய வார விழாவையொட்டி தென் மண்டல அளவில் சுதந்திர போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய சிவா, குயிலி மற்றும் ஐந்து புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு சிறப்பு தபால் உறைகள் வெளியிடப்பட்டது.மதுரையில் தென்மண்டல தலைவர் நடராஜன் கூறியதாவது: பல்வேறு தியாகங்கள் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாக வத்தலக்குண்டில் சுப்பிரமணிய சிவாவிற்கும்,

மதுரை :தபால் துறை தேசிய வார விழாவையொட்டி தென் மண்டல அளவில் சுதந்திர போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய சிவா, குயிலி மற்றும் ஐந்து புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு சிறப்பு தபால் உறைகள் வெளியிடப்பட்டது.

மதுரையில் தென்மண்டல தலைவர் நடராஜன் கூறியதாவது: பல்வேறு தியாகங்கள் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாக வத்தலக்குண்டில் சுப்பிரமணிய சிவாவிற்கும், சிவகங்கையில் குயிலிக்கும் தபால் உறைகள் வெளியிடப்பட்டன. ஏற்கனவே இம்மண்டல அளவில் புவிசார் குறியீடு பெற்ற நாகர்கோவில் கோயில் நகைகள், மதுரை சுங்குடி புடவைகள், காரைக்குடி கண்டாங்கி புடவைகள், பத்தமடை பாய், ஈத்தாமொழி தேங்காய்க்கு இந்தாண்டு சிறப்பு தபால் உறைகள் வெளியிடப்பட்டன.இதன் தொடர்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், திண்டுக்கல் சிறுமலை மற்றும் விருப்பாட்சி மலைவாழைப்பழம் மற்றும் பூட்டுக்கு சிறப்பு தபால் உறைகள் வெளியிடப்பட்டன என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X