சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.51.36 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
சென்னை:ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட 51.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் விமானம் நேற்று முன்தினம் வந்தது. அதில் வந்த 28 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்திற்குஇடம் அளிக்கும் வகையில் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றார்.அவரை இடைமறித்து சுங்க அதிகாரிகள்சோதனை
 ரூ.51.36 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை:ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட 51.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் விமானம் நேற்று முன்தினம் வந்தது. அதில் வந்த 28 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்திற்குஇடம் அளிக்கும் வகையில் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றார்.அவரை இடைமறித்து சுங்க அதிகாரிகள்சோதனை செய்தனர்.

அப்போது தங்க பசை அடங்கிய மூன்று பொட்டலங்களை அந்த நபர் ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்து மதிப்பிட்டதில் 51.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1055 கிராம் தங்கம் இருந்தது தெரிய வந்தது.தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X