தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகள் கட்டுப்படுத்த வேளாண்துறையினர் 'அட்வைஸ்'

Added : அக் 14, 2021
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.ஆனைமலை ஒன்றியத்தில், 58 ஆயிரம் ஏக்கர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அதிக அளவில் பரவும் காண்டாமிருக வண்டினால், தென்னையில் பாதிப்பு ஏற்பட்டு, விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதை கட்டுப்படுத்த வேளாண்துறையினர் அறிவுரை
 தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகள்   கட்டுப்படுத்த வேளாண்துறையினர் 'அட்வைஸ்'


ஆனைமலை : ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.ஆனைமலை ஒன்றியத்தில், 58 ஆயிரம் ஏக்கர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் அதிக அளவில் பரவும் காண்டாமிருக வண்டினால், தென்னையில் பாதிப்பு ஏற்பட்டு, விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதை கட்டுப்படுத்த வேளாண்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:மழைக்காலங்களில் தோப்பில் மாட்டு சாணம் போடப்படும் எருக்குழி, தோப்பில் போடப்பட்ட மக்கிய உரத்தின் அடியில், ஐந்து முதல், 15 செ.மீ., ஆழம் வரையில் சென்று, காண்டாமிருக வண்டுகள் முட்டைகளிடும்.முட்டை புழுவான பின், கூட்டுப்புழுவாகும். மழைக்காலத்தில்தான் காண்டாமிருக வண்டுகள், கூட்டுப்புழு பருவத்தில் இருந்து வண்டுகளாக வெளியேறும், மழைக்காலம் முடிவதற்குள் மீண்டும் முட்டைகளிடும்.ஒரு பெண் காண்டாமிருக வண்டு, 150 முட்டைகள் வரையில் இடும். இந்த வண்டுகள் மரங்களின் இளம் குருத்துப்பகுதிகளை துளையிட்டு உள்ளே சென்று சாப்பிடுவதால், குருத்துப்பகுதி விரியும் போது, தென்னையில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால், 15 முதல் 20 சதவீதம் வரையில் மகசூல் குறையும். தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில், பூஞ்சாணம் பிடித்து குருத்தழுகல் நோயும் ஏற்படும், சிகப்பு கூன் வண்டு தாக்குதல்களும் காணப்படும். சிகப்பு கூன் வண்டுகள் தாக்கினால், மகசூல் இழந்து மரம் மரணிக்கும்.காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த, 'மெட்டாரைசியம் அனிசோபிலியே' பூஞ்சாணத்தை பயன்படுத்தலாம்.

இந்த பூஞ்சாணத்தை எருக்குழியில் கலந்து விட்டால், காண்டாமிருக வண்டுகளின் புழுக்களை தாக்கி அழிக்கும்.தற்போது, விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ஆனைமலை வேளாண் அலுவலகத்தில், 450 கிலோ 'மெட்டாரைசியம் அனிசோபிலியே' இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஒரு கிலோவின் விலை, 135 ரூபாய். விவசாயிகள் இதைப்பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

தோப்பில் நோய் தாக்கி மரணித்த மரங்களையும், இடி தாக்கிய மரங்களையும் வெட்டி அகற்ற வேண்டும். இரவு நேரங்களில் ஏக்கருக்கு, ஒரு விளக்குப்பொறி வைக்க வேண்டும். ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கை, ஐந்து லிட்டர் நீரில் கரைத்து ஏக்கருக்கு, பானையில் ஐந்து இடத்தி வைக்க வேண்டும். ஆமணக்கு வாசனைக்கு வண்டுகள் கவரப்பட்டு பானையில் விழும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X