சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' விளையாட்டு மோசடி

Added : அக் 14, 2021
Share
Advertisement
சென்னை:'ஆன்லைன்' சூதாட்டம் வாயிலாக பல கோடி ரூபாய் சுருட்டிய பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்து கார், 24 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் 25. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் 'ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டபோது அதை சூதாட்டமாக மாற்றி மர்ம நபர்கள் தன்னிடம் இருந்து 87 லட்சம் ரூபாயை வாங்கி மோசடி
 'ஆன்லைன்' விளையாட்டு மோசடி

சென்னை:'ஆன்லைன்' சூதாட்டம் வாயிலாக பல கோடி ரூபாய் சுருட்டிய பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்து கார், 24 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் 25. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் 'ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டபோது அதை சூதாட்டமாக மாற்றி மர்ம நபர்கள் தன்னிடம் இருந்து 87 லட்சம் ரூபாயை வாங்கி மோசடி செய்துவிட்டனர்' என கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அப்போது கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்25 என்பவர் ஆன்லைன் சூதாட்டம் வாயிலாக பல கோடி ரூபாய் சுருட்டி வருவது தெரியவந்தது.மாமல்லபுரத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த ஹரிகிருஷ்ணனை நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவரிடம் இருந்து 24 சவரன் நகை 24.68 லட்சம் ரூபாய் 6 கிலோ வெள்ளி பொருட்கள் 10 மொபைல் போன்கள் 1 மடிக்கணினி 1 ஐபேட் மற்றும் எம்.ஜி.ஹெக்டர் காரை பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசாரிடம் ஹரிகிருஷ்ணன் அளித்துள்ள வாக்குமூலம்:நான் பொறியியல் பட்டதாரி. என் தந்தை ஆனந்த் 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் உடல்நலக்குறைவால் இறந்தார். தந்தையின் மறைவுக்குப் பின் கேசினோ லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற இணையதள விளையாட்டை நடத்தி வந்தேன்.இதற்கான லிங்க்கை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வேன். அதை கிளிக் செய்யும் நபர்களுக்கு பாஸ்வேர்டு தருவேன். அதை பயன்படுத்தி அவர்கள் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடலாம்.

இந்த விளையாட்டை சூதாட்டமாக மாற்றினேன்.விளையாட்டில் ஈடுபடுவோர் வெற்றி பெற்று விடுவோம் என எதிர்பார்த்து பணம் கட்டுவர். ஆனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டியதே நான் தான். இது அவர்களுக்கு தெரியாது. கிரிக்கெட் சூதாட்டமும் நடத்தி வந்தேன்.இதன் வாயிலாக 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் மோசடி செய்துள்ளேன். மோசடி தொகையில் ஜாலியாக ஊர் சுற்றுவேன். நட்சத்திர ஓட்டல்களில் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்தேன்.இவ்வாறு ஹரிகிருஷ்ணன் தன் வாக்குமூலத்தில் தெரிவித்துஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X