பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு 'கோவாக்சின்'

Added : அக் 14, 2021
Share
Advertisement
புதுடில்லி:'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்துள்ள 'கோவாக்சின்' தடுப்பூசி அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.நம் நாட்டில் 'கோவிஷீல்டு கோவாக்சின்' தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 96.43 கோடி தடுப்பூசி 'டோஸ்'கள் செலுத்தப்பட்டு உள்ளன.இதற்கிடையே 'சைடஸ் கேடிலா' என்ற நிறுவனம் 12 -

புதுடில்லி:'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்துள்ள 'கோவாக்சின்' தடுப்பூசி அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நம் நாட்டில் 'கோவிஷீல்டு கோவாக்சின்' தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 96.43 கோடி தடுப்பூசி 'டோஸ்'கள் செலுத்தப்பட்டு உள்ளன.இதற்கிடையே 'சைடஸ் கேடிலா' என்ற நிறுவனம் 12 - 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்காக ஊசியில்லா தடுப்பு மருந்தை தயாரித்துஉள்ளது.

இதை அவசர காலத்தில் பயன்படுத்த டி.சி.ஜி.ஐ. எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அனுமதி அளித்தது.இதேபோல் பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை 2 - 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்தது. இதற்கு அவசர கால அனுமதி வழங்க டி.சி.ஜி.ஐ.யிடம் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கான அனுமதி பெறும் நடைமுறை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு டி.சி.ஜி.ஐ. அனுமதி வழங்கியவுடன் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தடுப்பூசியின் பரிசோதனை தரவுகளை மீண்டும் ஆய்வு செய்யும்.தேவைப்பட்டால் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து மேலும் சில தரவுகள் கோரப்படும்.இந்த நடைமுறைகள் அடுத்த மூன்று வாரங்களில் நிறைவடையும். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின் அடுத்த மாதம் மத்தியில் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தும் பணிகள் துவங்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X