ரூ.2.50 கோடிக்கு விற்பனை; கோ ஆப் டெக்ஸ் இலக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.50 கோடிக்கு விற்பனை; கோ ஆப் டெக்ஸ் இலக்கு

Added : அக் 14, 2021
Share
மதுரை : ''கோ ஆப் டெக்ஸ் மூலம் ரூ.2.50 கோடிக்கு தீபாவளி தள்ளுபடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, மதுரை வெங்கலக்கடைத்தெரு கோஆப் டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

மதுரை : ''கோ ஆப் டெக்ஸ் மூலம் ரூ.2.50 கோடிக்கு தீபாவளி தள்ளுபடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, மதுரை வெங்கலக்கடைத்தெரு கோஆப் டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. தீபாவளியை முன்னிட்டு பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

பல வித வடிவமைப்புகளில் மென்பட்டுசேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள் விற்பனைக்குள்ளன. ஜவுளிகளை www.cooptex.com இணையதளம் மூலமும் பெறலாம் என்றார்.கோ ஆப் டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல மேலாளர் மோகன்குமார், மேலாளர்கள் நாகராஜன் (தணிக்கை), ஞானப்பிரகாசம்(விற்பனை), விற்பனை மேலாளர் மீனாட்சி சுந்தரம், மேலாளர் பாடலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X