பொது செய்தி

தமிழ்நாடு

நான்காவது முறையாக நிரம்பிய 160 அடி சோலையாறு அணை

Added : அக் 14, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு அணை நான்காவது முறையாக நிரம்பியதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் அனைத்து அணைகளும் நிரம்பின.இந்நிலையில், வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து
 நான்காவது முறையாக நிரம்பிய 160 அடி சோலையாறு அணை

வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு அணை நான்காவது முறையாக நிரம்பியதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் அனைத்து அணைகளும் நிரம்பின.இந்நிலையில், வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதோடு, சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

தொடர் மழையால், 160 உயரமுள்ள சோலையாறு அணை, இந்த ஆண்டில் நான்காவது முறையாக நிரம்பியது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சோலையாறு அணையில், நேற்று காலை, 160.91 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,479 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,310 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால், இந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 71.50 அடியாக இருந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 12, சோலையாறு - 47, மேல்நீராறு - 41, கீழ்நீராறு - 24, பரம்பிக்குளம் - 47, காடம்பாறை - 3,பெருவாரிப்பள்ளம் - 14, துாணக்கடவு - 3, மணக்கடவு - 3, பொள்ளாச்சி - 4.4 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X