தரமில்லாத அரசாணி விதையால் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரமில்லாத அரசாணி விதையால் பாதிப்பு

Added : அக் 14, 2021
Share
மடத்துக்குளம் : மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், பயிர்வகைகள் மற்றும் காய்கறிகள் முக்கிய சாகுபடியாக உள்ளது.துங்காவி, மலையாண்டிபட்டிணம், மெட்ராத்தி, ராமேகவுண்டன்புதுார், தாந்தோணி குமாரமங்கலம், மைவாடி, வேடப்பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள், சில மாதங்களுக்கு முன்பு, தனியார் நிறுவனம் விற்பனை செய்த அரசாணி விதைகளை வாங்கி விதைப்பு செய்தனர்.பல வாரங்கள் கடந்த
 தரமில்லாத அரசாணி விதையால் பாதிப்பு

மடத்துக்குளம் : மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், பயிர்வகைகள் மற்றும் காய்கறிகள் முக்கிய சாகுபடியாக உள்ளது.

துங்காவி, மலையாண்டிபட்டிணம், மெட்ராத்தி, ராமேகவுண்டன்புதுார், தாந்தோணி குமாரமங்கலம், மைவாடி, வேடப்பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள், சில மாதங்களுக்கு முன்பு, தனியார் நிறுவனம் விற்பனை செய்த அரசாணி விதைகளை வாங்கி விதைப்பு செய்தனர்.பல வாரங்கள் கடந்த நிலையில், நாற்றுகள் வளர்ந்து கொடிகள் படர்ந்தன, ஆனால் இதில் பூக்கள், அரசாணிக்காய் உற்பத்தி ஆகவில்லை.

இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தனியார் விதை நிறுவனத்தில் விதைகளை நடவு செய்தோம். ஆனால், அரசாணிக்காய் காய்க்கவில்லை. மலட்டு விதைகளாக உள்ளன.ஒரு ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து உள்ளோம்.இந்த தரமற்ற விதைகளால், நடப்பு பருவத்தில் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

இதற்குத் தீர்வாக தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட விதை நிறுவனத்திடம் உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.இதுகுறித்து, தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், 'அரசாணிக்காய் விதைகள் பாதிப்பு குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட விளைநிலங்களில் ஆய்வு செய்து வருகிறோம். அதிகாரிகளுடன் ஆலோசித்து இதற்கான தீர்வு காணப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X