பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., திட்ட 'பிதாமகன்கள்' நினைவிடம் அமைக்க ஆய்வு

Added : அக் 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பி.ஏ.பி., திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்த முன்னோடிகளுக்கு, நினைவிடம் அமைக்க உள்ள இடத்தை, செய்தித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தமிழகத்தின் முக்கிய நீர்ப்பாசன திட்டமாக, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் உள்ளது. இத்திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களுக்கு நினைவிடம் அமைத்து கவுரவிக்க, தமிழக அரசு
 பி.ஏ.பி., திட்ட 'பிதாமகன்கள்' நினைவிடம் அமைக்க ஆய்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பி.ஏ.பி., திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்த முன்னோடிகளுக்கு, நினைவிடம் அமைக்க உள்ள இடத்தை, செய்தித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தின் முக்கிய நீர்ப்பாசன திட்டமாக, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் உள்ளது. இத்திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களுக்கு நினைவிடம் அமைத்து கவுரவிக்க, தமிழக அரசு முன்வந்துள்ளது.பி.ஏ.பி., திட்டம் துவங்கப்பட்ட அக்., 7ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும், பி.ஏ.பி., தினமாக அனுசரித்து, அந்நாளில், அவர்களுக்கு கவுரவம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, பொள்ளாச்சி -- உடுமலை ரோட்டில் உள்ள, நீர்ப்பாசன துறை அலுவலக வளாகத்தில், இரண்டடுக்கு அரங்கம் அமைக்கவும், பி.ஏ.பி., திட்ட முன்னோடிகளுக்கு முழு உருவச்சிலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த இடத்தை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தமிழக செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் நேற்று ஆய்வு செய்தனர். கலெக்டர் சமீரன் மற்றும் சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் உடனிருந்தனர்.அமைச்சர் கூறியதாவது:கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கிய பாசன திட்டமான பி.ஏ.பி., திட்டம் அமைய, வி.கே., பழனிசாமி, தொழிலதிபர் மகாலிங்கம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் காரணமாக இருந்தனர்.அவர்களை கவுரவிக்க, இந்த இடத்தில் ஒரு வளாகம் உருவாக்கி, இரண்டு அடுக்கு அரங்கம் அமைக்கப்படுகிறது. தரைத்தளத்துக்கு வி.கே.பழனிசாமி பெயரும், முதல் தளத்துக்கு மகாலிங்கம் பெயரும், அரங்க வளாகத்துக்கு சி.சுப்பிரமணியம் பெயரும் வைக்கப்படும்.

மேலும், மூன்று பேருக்கும் உருவச்சிலை அமைத்து, பி.ஏ.பி., தினத்தன்று அரசு சார்பில் மரியாதை செய்யப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். அமைக்கப்பட உள்ள அரங்கம், 87 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில், 26 ஆயிரம் சதுரடியில் உருவாக உள்ளதாகவும், வளாகத்தின் தென்மேற்கு பகுதியில், மூவரின் உருவச்சிலை, உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் வரும் போதே பார்வையில் படும் வகையில், மேடை அமைத்து வைக்கப்படும்.இதற்காக, நீர்ப்பாசனத்துறை அலுவலக வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், மரங்கள் அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X