அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் டுவிட்

Added : அக் 14, 2021
Share
Advertisement
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கர்நாடகா தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை இன்னமும் திறந்துவிடாது மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கர்நாடகா தமிழகத்துக்கு தர வேண்டிய நீரினை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்.பன்னீர்செல்வம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கர்நாடகா தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை இன்னமும் திறந்துவிடாது மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கர்நாடகா தமிழகத்துக்கு தர வேண்டிய நீரினை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்.

பன்னீர்செல்வம்,

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தடையின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது

கே.எஸ்.அழகிரி,

தமிழக காங்., தலைவர்

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் தினசரி கொரோனா பாதிப்பு 1300க்கும் கீழ், சென்னையில் 164 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ந்து 17வது நாளாக குறைந்து வருவது நிம்மதியளிக்கும் செய்தி. தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கை, அதிகளவில் செலுத்திய தடுப்பூசி, முகக்கவசம் அணிந்து ஒத்துழைத்த மக்களும் இதற்கு காரணம். இவர்கள் பாராட்டத்தக்கவர்கள்.- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றி. நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று. வி.சி.,க்கு கிடைத்த பேரங்கீகாரம்.

- திருமாவளவன்,

வி.சி., தலைவர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X