பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு விவசாயிகளுக்கு விமோசனம் கிடைத்தது: பழைய கரும்பு விலை சட்டம் தொடருமென அறிவிப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
மதுரை:விவசாயிகள் ஆலைகளுக்கு விற்பனை செய்யும் கரும்புக்கு ஓராண்டுக்குள் பணம் தர வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய அறிவிப்புக்கு விவசாயிகள் தொடர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புதிய நடைமுறை விலக்கி கொள்ளப்பட்டது.மத்திய அரசின் கரும்பு சட்டம் 1996 ன் படி ஆலைகளுக்கு கரும்பு கொடுத்தால் 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும். அதற்கு மேல் தாமதம்

மதுரை:விவசாயிகள் ஆலைகளுக்கு விற்பனை செய்யும் கரும்புக்கு ஓராண்டுக்குள் பணம் தர வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய அறிவிப்புக்கு விவசாயிகள் தொடர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புதிய நடைமுறை விலக்கி கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் கரும்பு சட்டம் 1996 ன் படி ஆலைகளுக்கு கரும்பு கொடுத்தால் 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும். அதற்கு மேல் தாமதம் செய்தால் 15 சதவீத வட்டியுடன் தொகையை தர வேண்டும். கடந்த மாதம் மத்திய அரசின் சி.ஏ.சி.பி.(கரும்புக்கான கமிஷன்) மற்றும் நிதிஆயோக் இணைந்து புதிய செயல்உத்தரவை பிறப்பித்தன.

விவசாயிகளிடம் கரும்பை வாங்கும் ஆலைகள் முதல் மாதத்தில் 30 சதவீதம், 2வது மாதத்தில் 30 சதவீத தொகையை செலுத்த வேண்டும். மீதி 40 சதவீத தொகையை ஓராண்டுக்குள் செலுத்த வேண்டும் என அறிவித்தன.இது ஆலைகளுக்கு சாதகமாகவும் விவசாயிகளுக்கு பாதகமாகவும் இருந்ததால் உத்தரவை திரும்ப பெறக்கோரி மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மஹாராஷ்டிரா அரசுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் முன்புள்ள சட்டத்தின் படி கரும்பு விற்ற 14 நாட்களுக்குள் ஆலை நிர்வாகம் பணத்தை தர வேண்டும் என்ற நிலை தொடரும் என விளக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரதிய கிசான் சங்க தேசிய செயலாளர் பெருமாள் கூறுகையில்,''இது மஹாராஷ்டிரா அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதமாக இருந்தாலும் நாடு முழுவதும் இந்த நடைமுறை செல்லும் என்பதால் தமிழக கரும்பு விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X