இன்று, அரசு பள்ளியில் விஜயதசமி அட்மிஷன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று, அரசு பள்ளியில் விஜயதசமி 'அட்மிஷன்'

Added : அக் 14, 2021
Share
திருப்பூர் : விஜயதசமி முன்னிட்டு ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை எல்.கே.ஜி., வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.நவராத்திரி விழாவின் நிறைவு நாளானது விஜயதசமி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குழந்தைகளின் கல்வி பயணத்திற்கு பிள்ளையார் சுழி போடுவது வழக்கம்.இதனால், குழந்தைகள் கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்குவதாக கருதப்படுகிறது.

திருப்பூர் : விஜயதசமி முன்னிட்டு ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை எல்.கே.ஜி., வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளானது விஜயதசமி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குழந்தைகளின் கல்வி பயணத்திற்கு பிள்ளையார் சுழி போடுவது வழக்கம்.இதனால், குழந்தைகள் கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்குவதாக கருதப்படுகிறது. கோவில்களில், 'வித்யாரம்பம்' எனும் பெயரில், குழந்தைகளின் நாக்கில், 'ஓம்' அல்லது 'அ' எழுத்து எழுதுவர்.ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறுகையில், ''விஜயதசமி நாளில் மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர்.

இவர்களுக்காக எல்.கே.ஜி., வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். அட்மிஷனுக்காக குறிப்பிட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள், அங்கன்வாடி மையங்களில் தகுதியுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X