சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரரின் விரக்தி ஆடியோ; உடனடியாக கிடைத்தது விடுமுறை

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021
Share
Advertisement
திருநெல்வேலி: கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜாய்ஸ் 25. 2017ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். திருநெல்வேலியில் பாபநாசம் அணை பாதுகாப்பு பணியில்உள்ளார்.இவரது மனைவிக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்து இறந்தது. அதற்காக விடுமுறை கேட்டிருந்தார். தேர்தல் பணி இருந்ததால் அவருக்கு விடுமுறை தரப்படவில்லை. நேற்று முன்தினம் ஓட்டு எண்ணும் பணி முடிந்த பிறகும் விடுமுறை தராததால் அவர்

திருநெல்வேலி: கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜாய்ஸ் 25. 2017ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். திருநெல்வேலியில் பாபநாசம் அணை பாதுகாப்பு பணியில்உள்ளார்.

இவரது மனைவிக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்து இறந்தது. அதற்காக விடுமுறை கேட்டிருந்தார். தேர்தல் பணி இருந்ததால் அவருக்கு விடுமுறை தரப்படவில்லை. நேற்று முன்தினம் ஓட்டு எண்ணும் பணி முடிந்த பிறகும் விடுமுறை தராததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாகவும் இதற்கு ஆயுதப்படை ஆர்.ஐ.,தான் காரணம் என ஆடியோ வெளியிட்டார்.

இதையடுத்து நேற்று அவருக்கு அவசர அவசரமாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடலுார் கிளம்பிச்சென்றார். அவருக்கு 3 மாதங்களுக்கு முன்பே கடலுார் போலீசுக்கு மாறுதல் உத்தரவு வந்தும் அதனை அமல்படுத்தாமல் இழுத்தடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X