இந்தியா

பிரிட்டனுக்கான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது மத்திய அரசு

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி,:பிரிட்டன் பயணியருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதாக, மத்திய அரசு அறிவித்துஉள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், விமானப் பயணத்திற்கு, 72 மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை. பிரிட்டன் சென்று இறங்கியதும், 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட
பிரிட்டனுக்கான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது மத்திய அரசு

புதுடில்லி,:பிரிட்டன் பயணியருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதாக, மத்திய அரசு அறிவித்துஉள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், விமானப் பயணத்திற்கு, 72 மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை. பிரிட்டன் சென்று இறங்கியதும், 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. 'கோவிஷீல்டு' தடுப்பூசியை முழுமையாக போட்டிருந்தாலும், அதை பிரிட்டன் ஏற்க மறுத்தது.


latest tamil news



அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் பிரிட்டன் பயணியருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விமானம் ஏறுவதற்கு முன் ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை, 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் போன்ற விதிகள் அறிவிக்கப்பட்டன.இதனால் அதிர்ந்துபோன பிரிட்டன் அரசு, இந்திய பயணியருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கடந்த வாரம் திரும்பப் பெற்றது. கோவிஷீல்டு தடுப்பூசியையும் அங்கீகரிப்பதாகவும் அறிவித்தது.பிரிட்டன் அரசு நம் வழிக்கு வந்துஉள்ளதால், பிரிட்டன் பயணியருக்கு கட்டுப்பாடுகளை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, மத்திய அரசும் திரும்பப்பெற்று உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
14-அக்-202111:04:57 IST Report Abuse
raja இது...
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
14-அக்-202103:33:37 IST Report Abuse
Bharathi இதுதான் சிங்கம் மோடிஜியின் அரசுக்கும் முன்னர் இருந்த அடிமை மன்னு அரசுக்கும் உள்ள வித்தியாசம்.
Rate this:
Cancel
14-அக்-202102:02:06 IST Report Abuse
மோகனசுந்தரம் பதிலடி கொடுக்கும் போது தான் எல்லோரும் வழிக்கு வருகிறார்கள். அதற்கு நம் மோடி ஐயா தான் முக்கிய காரணம். அவர் வாழ்க பல்லாண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X