பொது செய்தி

இந்தியா

எல்லையில் கட்டட பணி; சீன ராணுவம் தீவிரம்

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி,: லடாக்கில், எல்லைக் கோட்டிற்கு அருகே, சீன ராணுவம் கட்டடங்கள் கட்டி வருவதால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு, லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது நடந்த மோதலில், இந்திய ராணுவத்தினர், 21 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில், 35 பேர் இறந்ததாக, அமெரிக்க உளவுத்

புதுடில்லி,: லடாக்கில், எல்லைக் கோட்டிற்கு அருகே, சீன ராணுவம் கட்டடங்கள் கட்டி வருவதால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.latest tamil newsகடந்த ஆண்டு, லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது நடந்த மோதலில், இந்திய ராணுவத்தினர், 21 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில், 35 பேர் இறந்ததாக, அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது.
இதையடுத்து, எல்லையில் இரு தரப்பும் படைகளை குவித்தன.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க, இந்தியா-சீனா வெளியுறவு துறை, துாதரகம் மற்றும் ராணுவ தளபதிகள் இடையே பல கட்ட பேச்சு நடந்தது. இதைத் தொடர்ந்து, கல்வான் எல்லையின் சில பகுதிகளில் இருந்து இரு தரப்பு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. எனினும், சில இடங்களை விட்டு சீன ராணுவம் இன்னும் வெளியேறாமல் உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் இரு தரப்பு ராணுவ தளபதிகள் இடையே நடந்த பேச்சு தோல்வி அடைந்தது.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த ஆண்டு மோதல் நடந்த பகுதியில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில், எல்லைக் கோட்டிற்கு அருகே, சீனா கட்டடங்களை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால், எல்லையில், எஞ்சியுள்ள பகுதிகளில் இருந்து சீன ராணுவம் இப்போதைக்கு வெளியேறாது என, தெரிகிறது.


latest tamil newsஅப்படியே சமரச பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, சீன ராணுவம் வெளியேறினாலும், போர் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள வசதியாக, இந்த கட்டடங்களை சீனா கட்டுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையின் தலையங்கத்தில் 'இந்தியா, தன் விருப்பத்திற்கேற்ப எல்லையை பெற முடியாது; இந்தியா போர் தொடுத்தால் நிச்சயம் தோல்வியை சந்திக்கும்' என, கூறப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால், அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
14-அக்-202113:24:34 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN சந்தர்பம் கிடைத்ததும் சீனாவின் முதுகெலும்பை முறிக்க வேண்டும், அவர்கள் ஜென்மதுக்கும் நிமிரக்கூடாது. சீனாவை 5 நாடுகளாக பிரிக்க தீவிரமாக செயல்பட வேண்டும். திபெத் சுதந்திரம் அடைய நாம் உதவவேண்டும், நமது எல்லையில் சீனா இருக்க கூடாது. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
PRAKASH RS -  ( Posted via: Dinamalar Android App )
14-அக்-202110:55:33 IST Report Abuse
PRAKASH RS INDO ALSO BUILD CONCRETE INDO SINO -.WHAT THEY DO INDO ALSO DO....JAI HIND
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-அக்-202110:05:16 IST Report Abuse
pradeesh parthasarathy நீங்களும் எல்லையில் கட்டடம் கட்டுங்க .... தேர்தலில் எதிர்கட்சிகளை வீழ்த்த காட்டும் தந்திரம் எல்லை பகுதியில் சீனாவிடம் உங்களுக்கு காட்ட முடியவில்லையே ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X