பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : அக் 14, 2021
Share
Advertisement
குழந்தைகள் நடன நிகழ்ச்சிஉடுமலை பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஷ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், நவராத்திரியையொட்டி, மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.பிரம்மா குமாரிகள், அமைதி இல்லத்தில், இந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. முதல் நாளில், சோமநாத் ஜோதிர்லிங்க தரிசனம் மற்றும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடந்தது.இரண்டாம் நாள் ஸ்ரீலட்சுமி தேவியின்

குழந்தைகள் நடன நிகழ்ச்சி
உடுமலை பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஷ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், நவராத்திரியையொட்டி, மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பிரம்மா குமாரிகள், அமைதி இல்லத்தில், இந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. முதல் நாளில், சோமநாத் ஜோதிர்லிங்க தரிசனம் மற்றும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடந்தது.இரண்டாம் நாள் ஸ்ரீலட்சுமி தேவியின் தத்ரூப தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு வேடமிட்ட, குழந்தைகள் பங்கேற்றனர். தொடர்ந்து குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், பக்தர்கள், கலந்து கொண்டனர்.உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் -2 (கோவை) இணை இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும், 2022ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை, ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

வரும், 31ம் தேதிக்குள், பதிவு பெற்ற தொழிற்சாலைகள் https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில், உரிய உரிமத் தொகையை, ஆன்லைனில் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவில்களை திறக்க கோரிக்கைவால்பாறை ஹிந்து முன்னணி நகர பொதுசெயலாளர் சேகர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக தீவிரமாக இருந்த வந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. பரவல் குறைந்து வருவதால், தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.ஆனால், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மிக முக்கியமான நாட்களானவெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.

இதனால், பக்தர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். கோவில் திறக்காததால், பூ வியாபாரிகள் முதல் கோவிலை சார்ந்து தொழில் செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்காத வகையில், தினமும் கோவில்களை திறக்க, அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுபொள்ளாச்சி கிராமங்களில், சேவை அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கு சத்தான சிற்றுண்டி வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழி செய்தனர்.'கேர் டிரஸ்ட்' சேவை அமைப்பு சார்பில், பொள்ளாச்சி தெற்கு கே.நாகூர், தொண்டாமுத்துார், ஆனைமலை கெங்கம்பாளையம், கிணத்துக்கடவு சென்றாம்பாளையம் கிராமங்களில், 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு திறனை வளர்க்க உதவும் ஊட்டச்சத்து மிக்க சிற்றுண்டிகள் வழங்கினர்.

இதில், நிலக்கடலை, கொண்டை கடலை, ராகி உள்ளிட்ட சத்து மிக்க பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கி, இது போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால், தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பெற்று, நோய் எதிர்ப்பு திறனுடன் வாழலாம், என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், 350 குழந்தைகள் பயனடைந்தனர்.பள்ளி வகுப்பறை புதுப்பிப்புபொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சந்தேகவுண்டன்பாளையம் ஊராட்சி துவக்கப் பள்ளிக்கு, உள்ளூரில் செயல்படும் 'ஆர்கோ ைஹட்டோஸ்' நிறுவனம், கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் வாயிலாக, பழைய வகுப்பறை கட்டடத்தை பழுது பார்த்தது.வகுப்பறையை புதுப்பித்து, 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்குவதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

மேலும், மின்விசிறி, குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டது. கட்டட திறப்பு விழாவில், நிறுவன நிர்வாக இயக்குனர் ஸ்ரீகாந்த் சங்கர்தாஸ் பைராகி, ஊராட்சி தலைவர் செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் கண்ணுசாமி, வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ், தலைமை ஆசிரியர் அமுதாராணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.மழைக்கால நோய்களால் அச்சம்உடுமலையில், தற்போது மழை பெய்து வருவதால், மழைக் காலங்களில் பரவக் கூடிய வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, டெப்டோஸ்பைரோசிஸ், டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது

.குடிநீரை எப்போதும் கொதிக்க வைத்து ஆற வைத்த பின்னரே, குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றியும், தெருக்களிலும் தேவையின்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை காரணமாக தேங்கியிருந்த தண்ணீரை, உடனடியாக வடியச் செய்ய வேண்டும்.வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உப்பு, சர்க்கரை கரைசலை குடிக்கச் செய்ய வேண்டும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்பு இருந்தால், உடனடியாக, அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, உடுமலை நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு உடுமலை அடுத்த அந்தியூர் கமலம் கலை கல்லுாரியில் நடந்த முதலாமாண்டு மாணவர்கள் வருகைக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் லட்சுமிபிரியா, தலைமை வகித்தார்.கல்லுாரி செயலர் சஞ்சீவ் முன்னிலை வகிக்க, முதலாமாண்டு மாணவி கீர்த்தனா பேசினார். திருப்பூர் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பிரவீன், மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் குறித்து விளக்கினார். விழா ஏற்பாடுகளை, வேதியியல் துறைத்தலைவர் கீதாமணி, உதவிப் பேராசிரியர் கோமதி ஆகியோர் செய்திருந்தனர். மாணவி சிந்துகவி, நன்றி கூறினார்.

வேடபட்டி ரோடு புதுப்பிப்பு வேடபட்டி -கே.டி.எல்., இணைப்பு ரோடு இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்டது. மலையாண்டிபட்டிணம், ஜோத்தம்பட்டி, செங்கன்டிபுதூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களும், உடுமலை - தாராபுரம் ரோட்டிலிருந்து மடத்துக்குளம் வரும் பயணிகளும் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.மடத்துக்குளம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில், எதிர்பாராதவிதமாக போக்குவரத்து பாதிப்பு

ஏற்படும் போது உடுமலை, தாராபுரம் மற்றும் இதரப்பகுதிகளுக்கு செல்ல கே.டி.எல்.,- வேடபட்டி ரோடு மாற்றுப் பாதையாக பயன்படுத்தப்படுகிறது.பலஆண்டு பயன்பாட்டினால் சேதமடைந்து இருந்து இந்த ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் இந்த ரோடு பராமரிப்புபணி தொடங்கியது. தற்போது இந்த ரோடு அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X