பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும், நாளையும்... தடுப்பூசி முகாம் இல்லை

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : 'இன்று ஆயுதபூஜை, நாளை விஜயதசமி அரசு விடுமுறை. இதனால், முகாம் கிடையாது. சனிக்கிழமை முகாம் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,' என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த, 10ம் தேதி ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது. 78 ஆயிரத்து, 396 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 11 மற்றும், 12ம் தேதி இரு நாட்கள் முகாம் நடக்காத

திருப்பூர் : 'இன்று ஆயுதபூஜை, நாளை விஜயதசமி அரசு விடுமுறை. இதனால், முகாம் கிடையாது. சனிக்கிழமை முகாம் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,' என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த, 10ம் தேதி ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது. 78 ஆயிரத்து, 396 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 11 மற்றும், 12ம் தேதி இரு நாட்கள் முகாம் நடக்காத நிலையில், நேற்று (13ம் தேதி) மாநகர், புறநகர பகுதியில் தடுப்பூசி முகாம் நடந்தது. 16,398 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இன்று ஆயுதபூஜை, நாளை விஜயதசமி அரசு விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் தடுப்பூசி முகாம் கிடையாது. தொடர் விடுமுறை காரணமாக, 17ம் தேதி ஞாயிறன்று முகாம் இல்லை என அரசு அறிவித்துள்ளது.

அதே நேரம், இரு நாள் இடைவெளிக்கு பின் சனிக்கிழமை முகாம் நடக்குமா என பின், அறிவிக்கப்பட உள்ளது.சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில்,''விடுமுறை தினம் என்பதால், இன்றும், நாளையும் தடுப்பூசி முகாம் நடக்காது. வரும், 16 ம் தேதி முகாம் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முகாம் (17ம் தேதி) இல்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X