பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., அலுவலகத்தில் அ.தி.மு.க., பிரமுகர்

Added : அக் 14, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறையில், தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அ.தி.மு.க., பிரமுகர் கலந்து கொண்டதால், கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறையில், தேயிலை தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.இந்நிலையில், வரும், 16ம் தேதி டாடா
 தி.மு.க., அலுவலகத்தில் அ.தி.மு.க., பிரமுகர்

வால்பாறை : வால்பாறையில், தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அ.தி.மு.க., பிரமுகர் கலந்து கொண்டதால், கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறையில், தேயிலை தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், வரும், 16ம் தேதி டாடா எஸ்டேட் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து, வால்பாறை நகைக்கடை வீதியில் உள்ள எம்.எல்.எப்., (தி.மு.க) அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கூட்டமைப்பின் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான அமீது கலந்து கொண்டார்.பொது இடங்களில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் நேரில் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் பரஸ்பரம் விசாரிப்பது இயல்பான ஒன்று. ஆனால், தி.மு.க., கட்சி அலுவலகத்திற்கே அ.தி.மு.க., பிரமுகர் சென்று கூட்டம் நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம், அ.தி.மு.க.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X