பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' - காலத்தின் கட்டாயம்!

Added : அக் 14, 2021
Share
Advertisement
சர்வதேச அளவில் நியூயார்க், லண்டன், டோக்கியோ, பெர்லின் உள்ளிட்ட பல நகரங்கள் 'ஸ்மார்ட் சிட்டி' என்று அடையாளம் காணப்படுகின்றன. அவற்றின் சாலைகள் கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, தொழில்நுட்ப ரீதியிலான நிர்வாக மாற்றங்கள் காரணமாக அந்த நகரங்கள் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாகச் சமாளிக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.அந்த வகையில் எதிர்வரக்கூடிய 10

சர்வதேச அளவில் நியூயார்க், லண்டன், டோக்கியோ, பெர்லின் உள்ளிட்ட பல நகரங்கள் 'ஸ்மார்ட் சிட்டி' என்று அடையாளம் காணப்படுகின்றன.

அவற்றின் சாலைகள் கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, தொழில்நுட்ப ரீதியிலான நிர்வாக மாற்றங்கள் காரணமாக அந்த நகரங்கள் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாகச் சமாளிக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.அந்த வகையில் எதிர்வரக்கூடிய 10 ஆண்டுகளில் ஏற்படும் மக்கள்தொகைப் பெருக்கம், இடம் பெயர்பவர்கள் எண்ணிக்கை, தேவைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் போதுமான அளவில் திட்டமிட்டு உருவாக்கி, வளர்ச்சி அடையும் வகையில் நம் நாட்டிலும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.என்ன காரணம்?நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி, கூட்ட நெரிசல், வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், சாலைகள் பராமரிப்பு, சுகாதாரம் ஆகியவற்றிற்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டது.'ஸ்மார்ட் சிட்டி' என்ற நவீன உள் கட்டமைப்புகள் கொண்ட நகர்ப்பகுதிகளுக்கான தேவை எழுந்தது.மத்திய அரசு இந்திய அளவில் 100 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது

.இந்திய அளவில் 2030ம் ஆண்டு மக்கள் தொகையில் 50 முதல் 60 சதவீதம் நகர்ப்புறங்கள் கொண்டிருக்கும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. 2025ல் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தண்ணீர் பற்றாக்குறைகடந்த 1951ம் ஆண்டில் நகரங்களில் தனி நபர் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு ஒரு நாளுக்கு சராசரி 140 லிட்டராக இருந்தது.

2001ம் ஆண்டில் அந்த அளவு 50 லிட்டராக குறைந்துள்ளது.மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப தண்ணீரின் பற்றாக்குறை அதிகரிப்பதால் 2025ம் ஆண்டில் இந்த அளவு சுமார் 33 லிட்டராக குறையலாம் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. சுகாதாரம், கழிப்பிடம், கழிவுநீர் அகற்றுதல், மழைநீர் வடிகால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் மேலை நாடுகளைப்போல 'ஸ்மார்ட்டாக' மாறுவது அவசியம்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கான பல்வேறு கட்ட தேர்வுகளில் தமிழக அளவில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், துாத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் இங்கு வேகமெடுத்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X