பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமலையில் புதிய பஸ் ஸ்டாண்ட்வருவாய்த்துறை திட்டம் நிறைவேறுமா?

Added : அக் 14, 2021
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டுமென, 20 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வருவாய்த்துறையினர் சிறப்பான திட்டத்தை வகுத்துள்ளனர்.ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. மேலும், டாப்சிலிப், பரம்பிக்குளம், ஆழியாறு பகுதிகளுக்கு ஆனைமலை வழியாக அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன.ஆனைமலைக்கு பல பகுதிகளில்
 ஆனைமலையில் புதிய பஸ் ஸ்டாண்ட்வருவாய்த்துறை திட்டம் நிறைவேறுமா?

ஆனைமலை : ஆனைமலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டுமென, 20 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வருவாய்த்துறையினர் சிறப்பான திட்டத்தை வகுத்துள்ளனர்.ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. மேலும், டாப்சிலிப், பரம்பிக்குளம், ஆழியாறு பகுதிகளுக்கு ஆனைமலை வழியாக அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன.ஆனைமலைக்கு பல பகுதிகளில் இருந்தும், விசேஷ நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பஸ் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், மக்களின் வசதிக்காக, 2001ல் ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட், பத்து கடைகளுடன் கூடிய 'தாட்கோ' வணிக வளாகம் கட்டப்பட்டது.மூன்று மாதமே!முறையான திட்டமிடல் இல்லாமல், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டதால், மக்கள் பயன்படுத்தாமலும், பஸ்கள் நிற்காமலும், மூன்றே மாதங்களில் மூடுவிழா கண்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள நிழற்கூரைகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டது.கடந்த, 20 ஆண்டுகளாக ஆனைமலையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். முக்கோணம் பகுதி, மாசாணியம்மன் கோவில் அருகில் என, பல இடங்களில் ரோட்டில் நின்று பஸ் வசதி பெறுகின்றனர்.வாக்குறுதி என்னாச்சுரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால், போக்குவரத்து பாதித்து விபத்துக்களும் ஏற்படுகிறது. அதேபோல், மாசாணியம்மன் கோவில் அருகில், விசேஷ தினங்களில் பெருங்கூட்டமாக பக்தர்கள் பஸ்சில் ஏறுவதால், அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.கடந்த, 20 ஆண்டுகளில் எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், ஒருவர் கூட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.ஆனைமலை தாலுகா அந்தஸ்து பெற்றும், பஸ் ஸ்டாண்ட் கூட இல்லை. மக்கள் எளிதாக பஸ் வசதி பெறுவதற்கும், போக்குவரத்து பாதிப்பை தவிர்க்கவும், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நல்ல யோசனைவருவாய்த்துறையினர் கூறியதாவது:

ஆனைமலை பேரூராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றி, அப்பகுதி மற்றும் முக்கோணம் பகுதியை இணைத்து புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டவும், முக்கோணம் பகுதியில் 'சிக்னல்' அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டலாம். அப்போது, தாலுகா அலுவலகம், வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் என அனைத்தும் அருகிலேயே இருக்கும்.பல பகுதியில் இருந்து, பஸ்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், மேம்படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்ட் கட்ட முடியும். அரசு, அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உதவினால் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும்.மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தால், விரைவில் ஆய்வு செய்து பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டம் தயாரிக்கலாம்; நிதி ஒதுக்கீடு பெற்று திட்டத்தை நிறைவேற்றலாம்.இவ்வாறு, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X