பொது செய்தி

தமிழ்நாடு

எங்கெங்கு காணினும் குப்பை மயம்! அழிவின் விளிம்பில் பி.ஏ.பி., வாய்க்கால்பொதுப்பணி துறையினர் 'அசட்டை'

Added : அக் 14, 2021
Share
Advertisement
பொங்கலுார் : பொங்கலுார், பி.ஏ.பி., வாய்க்கால் முழுவதும் மயமாகி வருகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க பொதுப்பணி துறையினர் களமிறங்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகேள் விடுத்துள்ளனர்.பொங்கலுார் வட்டாரத்தில், மக்கள் தொகை அதிவேகமாக அதிகரித்து, நுகர்வு கலாசாரம் அதிகரித்துள்ளது. இதனால், மக்காத குப்பைகளின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஊராட்சி நிர்வாகம் சார்பில்

பொங்கலுார் : பொங்கலுார், பி.ஏ.பி., வாய்க்கால் முழுவதும் மயமாகி வருகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க பொதுப்பணி துறையினர் களமிறங்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகேள் விடுத்துள்ளனர்.

பொங்கலுார் வட்டாரத்தில், மக்கள் தொகை அதிவேகமாக அதிகரித்து, நுகர்வு கலாசாரம் அதிகரித்துள்ளது. இதனால், மக்காத குப்பைகளின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அள்ள ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பாதி குப்பைகளை கூட அகற்றுவது கிடையாது. குறைந்த சம்பளம் என்பதால் தூய்மை பணியாளர்களை முழுமையாக வேலை வாங்க ஊராட்சியால் இயலவில்லை. மொத்த குப்பைகளை அகற்றினாலும் அவற்றை கொட்டுவதற்கு இடமில்லை. குப்பைகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்து சென்றால் பொதுமக்கள் பிரச்னை செய்கின்றனர்.பி.ஏ.பி., பொங்கலுாரை இரண்டாக பிரிகிறது.

இரு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் வாய்க்கால் முழுக்க குப்பைகளை கொட்டி வருகின்றனர்.பி.ஏ.பி., வாய்க்கால் ஆளரவமற்ற பகுதியாக இருப்பதால் அது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது.இன்னும், ஓரிரு பி.ஏ.பி., வாய்க்கால் முழுவதும் குப்பைகளால் நிரம்பி விடும். இதனை தடுக்க பொதுப்பணித்துறை களத்தில் இறங்க வேண்டும். குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இரும்பு பாலத்தால் அதிகரிக்கும் குப்பைபொங்கலுார் - ஐயப்பா நகருக்குச் செல்ல தார் ரோட்டில் சென்றால், அரை கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு செல்ல, அப்போதிருந்த தோட்ட உரிமையாளர் இரும்பு பாலம் அமைத்ததாககூறப்படுகிறது.

தற்போது வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு குடியிருப்புகள் பெருகிவிட்டன.அந்த இரும்பு பாலத்தின் வழியாக வந்து சுலபமாக வாய்க்காலில் குப்பைகளை கொட்டுகின்றனர். அந்த இரும்பு பாலத்தை அகற்றினாலே குப்பை கொட்டுவது குறைந்துவிடும். பொது பணித்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.ஏ.பி., பொங்கலுாரை இரண்டாக பிரிகிறது. இரு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் வாய்க்கால் முழுக்க குப்பைகளை கொட்டி வருகின்றனர். பி.ஏ.பி., வாய்க்கால் ஆளரவமற்ற பகுதியாக இருப்பதால் அது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X