சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரோலில் வந்த தலைமறைவு ஆயுள் கைதி மீண்டும் கைது

Added : அக் 14, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி செட்டீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அலாவுதீன், 41: இவர், 2003ம் ஆண்டு நடந்த, சென்னை விமான நிலைய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.2014ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை, புழல் சிறையில்

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி செட்டீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அலாவுதீன், 41: இவர், 2003ம் ஆண்டு நடந்த, சென்னை விமான நிலைய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.2014ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை, புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.இவரது தந்தை சம்சுதீன் உடல் நிலை சரியில்லை எனக்கூறி 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி பரோலில் வெளியே வந்தவர் மீண்டும் மே 5ம் தேதி சிறைக்கு திரும்பவில்லை.சிறை அலுவலர் தர்மலிங்கம் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து அலாவுதீனை தேடி வந்தனர்.இந்நிலையில், அலாவுதீன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், நேற்று மதியம் 1:00 மணியளவில் டிஸ்சார்ஜ் ஆக இருந்த அலாவூதீனை ஜிப்மர் மருத்துவமனையில் கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X