சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழைநீர் பட்டதால் தகராறு 16 பேர் மீது வழக்குப் பதிவு

Added : அக் 14, 2021
Share
Advertisement
செஞ்சி-சாலையோரம் நின்றவர்கள் மீது மழைநீர் பட்டதால் ஏற்பட்ட தகராறில் 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அனந்தபுரம. சங்கீதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி லலிதா, 53; இவரது மகன் திருநாவுக்கரசு, 26; இருவரும் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் அப்பகுதியில் சாலையோரம் நின்றிருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த

செஞ்சி-சாலையோரம் நின்றவர்கள் மீது மழைநீர் பட்டதால் ஏற்பட்ட தகராறில் 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அனந்தபுரம. சங்கீதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி லலிதா, 53; இவரது மகன் திருநாவுக்கரசு, 26; இருவரும் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் அப்பகுதியில் சாலையோரம் நின்றிருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 40; பைக்கில் சென்றபோது, சாலையில் தேங்கியிருந்த மழைநீர் லலிதா, திருநாவுக்கரசு மீது பட்டது. இதனை இருவரும் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பிலும் 4 பேர் காயமடைந்தனர். இரு தரப்பு புகார்களின் பேரில், கிருஷ்ணமூர்த்தி, கலியமூர்த்தி, திருநாவுக்கரசு, லலிதா உட்பட 16 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X