சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெய்வேலி வாலிபர் கொலை வழக்கு

Added : அக் 14, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம்-நெய்வேலியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ., பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், நெய்வேலி, மந்தாரக்குப்பம், ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் அருண் (எ) அருள்குமார், 35. இவரது மனைவி ரம்யா, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அருண் கைதாகி, 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில்

மந்தாரக்குப்பம்-நெய்வேலியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ., பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், நெய்வேலி, மந்தாரக்குப்பம், ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் அருண் (எ) அருள்குமார், 35. இவரது மனைவி ரம்யா, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அருண் கைதாகி, 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்தார்.தண்டனை முடிந்து 4 மாதங்களுக்கு முன் வெளியே வந்தார். பின், சிவகங்கையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்த அவர், மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரில் உள்ள சித்தி வீட்டில் வந்து தங்கியிருந்தார்.கடந்த செப்., 1ம் தேதி இரவு இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன், முட்புதரில் அருண் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மந்தாரக்குப்பம் போலீசார், வழக்குப் பதிந்து குற்றவாளிகள் வெங்கடேசன் மகன் ராகுல் (எ) ஜெயசூர்யா, 20; பாம்புபாண்டியன் மகன் தேவா, 29; பிரேம்குமார் மகன் சுதாகர், 24; மோகன்தாஸ் மகன் டேவிஸ்பிரவீன், 25; அறிவரதன் மகன் நீலகண்டன், 24, ஆகியோரை கைது செய்தனர்.இந்நிலையில் முக்கிய குற்றவாளி ராகுல் கொடுத்த வாக்குமூலத்தில், தனது அண்ணன் ஹரிகிருஷ்ணனுக்கும், அருண் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் காரணமாக ஹரிகிருஷ்ணன் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.அதனால் அண்ணன் மரணத்திற்கு அருண் தான் காரணம் என கருதிய எனது தாய் ஜானகி, அருணை கொலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.அதனால், தனது நண்பருடன் சேர்ந்து அருணை கொலை செய்ததாக தெரிவித்தார். அதனடிப்படையில், ஜானகி குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜானகியை, 41, போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான ஜானகி பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X