சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடகள வீராங்கனை தற்கொலை காதல் கணவருக்கு 7 ஆண்டு சிறை

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார்-வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பாதி அருந்ததியர் நகரைச் சேர்ந்தவர் வீரக்குமார், 34: பொறியாளர். இவருக்கும் பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தடகள வீராங்கனை இந்துமதி, 26; என்பவரும் 2014ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.கடலுார்,

கடலுார்-வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பாதி அருந்ததியர் நகரைச் சேர்ந்தவர் வீரக்குமார், 34: பொறியாளர். இவருக்கும் பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தடகள வீராங்கனை இந்துமதி, 26; என்பவரும் 2014ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.கடலுார், ஆல்பேட்டை, கன்னியக்கோவில் தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷ்ராவ் (2) என்ற மகன், திஷீத்ராவ் என்ற 4 மாத பெண் குழந்தை இருந்த நிலையில், 2018 ஜூலை 31ல் மர்மமான முறையில் இந்துமதி துாக்குப்போட்டு இறந்தார்.இந்துமதியின் தாய் ஜெயபாரதி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தார். கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். சொந்தமாக தொழில் செய்வதற்கு இந்துமதியிடம் ரூ.3 லட்சம் கேட்டு வீரக்குமார் துன்புறுத்தி வந்துள்ளார். அதனால், இந்துமதி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.வரதட்சணை கொடுமை வழக்கில், வீரக்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடலுார் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.நீதிபதி பாலகிருஷ்ணண் விசாரணை நடத்தினார். குற்றவாளி வீரக்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X