பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட இருவர் தலா 52 ஓட்டுகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு

Added : அக் 14, 2021
Share
Advertisement
திண்டிவனம்,-ஒலக்கூர் ஒன்றிய ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இருவர் தலா 52 ஓட்டுகள் பெற்றதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்தில் வைரபுரம் கிராம ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு செங்கேணி, பிரபாகரன் போட்டியிட்டனர். இருவரும் தலா 52 ஓட்டுகள் பெற்றனர்.இதனால், யார் வெற்றி பெற்றது என

திண்டிவனம்,-ஒலக்கூர் ஒன்றிய ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இருவர் தலா 52 ஓட்டுகள் பெற்றதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்தில் வைரபுரம் கிராம ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு செங்கேணி, பிரபாகரன் போட்டியிட்டனர். இருவரும் தலா 52 ஓட்டுகள் பெற்றனர்.இதனால், யார் வெற்றி பெற்றது என அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. குலுக்கல் முறையில் தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கு வேட்பாளர்கள் ஒப்புக் கொண்டனர். அதன்படி, ஒலக்கூர் பி.டி.ஓ., சீத்தாலட்சுமி முன்னிலையில் குலுக்கல் நடந்தது. அதில், பிரபாகரன் பெயர் தேர்வானது. அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X