பொது செய்தி

தமிழ்நாடு

வானுார் ஒன்றிய 12வது வார்டு: அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி

Added : அக் 14, 2021
Share
Advertisement
வானுார்-வானுார் ஒன்றிய 12வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட கணேசன் வெற்றி பெற்றார்.விழுப்புரம் மாவட்டம், வானுார் ஒன்றியத்தில் கரசானுார், 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கணேசன் போட்டியிட்டார். இவர் 2,130 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் ஞானசேகரன் 1,635 ஓட்டுகளும் பெற்றனர். கணேசன் 495

வானுார்-வானுார் ஒன்றிய 12வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட கணேசன் வெற்றி பெற்றார்.விழுப்புரம் மாவட்டம், வானுார் ஒன்றியத்தில் கரசானுார், 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கணேசன் போட்டியிட்டார். இவர் 2,130 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் ஞானசேகரன் 1,635 ஓட்டுகளும் பெற்றனர். கணேசன் 495 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கணேசனிடம், வானுார் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். கட்சி நிர்வாகிகள், ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இது குறித்து கணேசன் கூறுகையில், 'என்னை ஆதரித்து வெற்றி பெற செய்த மக்களுக்கும், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது வார்டில் உள்ள அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைக்க பாடுபடுவேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X