கே.எம்.சி., கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கே.எம்.சி., கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

Added : அக் 14, 2021
Share
வெள்ளகோவில் : முத்துாரை அடுத்த செட்டியார்பாளையத்தில் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.காங்கயம் ஜே.எம்., மாஜிஸ்திரேட் பிரவீன்குமார் தலைமை வகித்தார். கல்லுாரியின் தலைவர் அய்யாதுரை, செயலாளர் பழனிசாமி, பொருளாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், மாஜிஸ்திரேட் பிரவீன்குமார்

வெள்ளகோவில் : முத்துாரை அடுத்த செட்டியார்பாளையத்தில் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.காங்கயம் ஜே.எம்., மாஜிஸ்திரேட் பிரவீன்குமார் தலைமை வகித்தார்.

கல்லுாரியின் தலைவர் அய்யாதுரை, செயலாளர் பழனிசாமி, பொருளாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், மாஜிஸ்திரேட் பிரவீன்குமார் பேசியதாவது: பெண்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு அளிக்கப்படும் சட்ட உதவிகள் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் சட்டத்தினை மதித்து செயல்படவேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.மொபைல் போன், வலைதளங்களை பாதுகாப்பான முறைகளில் கவனமுடன் கையாள்வது அவசியம். பெண்களுக்கு ஏற்படும் பிரச்னை, புகாருக்கு இலவச சட்ட உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X