சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமறைவு குற்றவாளி தப்பியோடியதால் பரபரப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமறைவு குற்றவாளி தப்பியோடியதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், வடலுார், அடுத்த கருங்குழியைச் சேர்ந்தவர் மூட்டை பூச்சி (எ) சம்பத், 35; நெய்வேலி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் வடலுார் அருகில் நேற்று முன்தினம் சாலை விபத்தில்

கடலுார்-கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமறைவு குற்றவாளி தப்பியோடியதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், வடலுார், அடுத்த கருங்குழியைச் சேர்ந்தவர் மூட்டை பூச்சி (எ) சம்பத், 35; நெய்வேலி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் வடலுார் அருகில் நேற்று முன்தினம் சாலை விபத்தில் காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியான அவரை போலீசார் கண்காணித்தனர். இதனையறிந்த சம்பத் நேற்றிரவு 7:30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. கடலுார், புதுநகர் போலீசார், தப்பியோடிய சம்பத்தை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X