பொது செய்தி

தமிழ்நாடு

'அட்மா' திட்டத்தில் விவசாயிக்கு தொழில்நுட்ப ஆலோசனை

Added : அக் 14, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி வேளாண் துறையினர் சார்பில், 'அட்மா' திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனை, கலந்துரையாடல் மற்றும் ராமநாதபுரம் கிராம விவசாய உற்பத்தியாளர் குழு அறிமுக கூட்டம் ஆகியவை, அவிநாசி அருகேயுள்ள கருவலுார், ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் நடந்தது.அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு, முன்னிலை வகித்தார். பொங்கலுார் வேளாண்மை அறிவியல்

அவிநாசி : அவிநாசி வேளாண் துறையினர் சார்பில், 'அட்மா' திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனை, கலந்துரையாடல் மற்றும் ராமநாதபுரம் கிராம விவசாய உற்பத்தியாளர் குழு அறிமுக கூட்டம் ஆகியவை, அவிநாசி அருகேயுள்ள கருவலுார், ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் நடந்தது.அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு, முன்னிலை வகித்தார்.

பொங்கலுார் வேளாண்மை அறிவியல் நிலைய ஆராய்ச்சியாளர் கதிரவன், தற்சார்பு விவசாயம் குறித்து பேசினார்.அவிநாசி ஒருங்கிணைந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் அங்கப்பன், ராமநாதபுரம் உற்பத்தியாளர் குழு குழுவின் நோக்கம், செயல்பாடு குறித்து விளக்கினார்.நிகழ்ச்சியில், விவசாய உபகரணங்கள் கண்காட்சி இடம் பெற்றது. இயந்திரங்களின் உதவியுடன் களை எடுத்தல், உழவு ஓட்டுதல் உள்ளிட்ட பணிகள் செய்து காண்பிக்கப்பட்டன. 60 விவசாயிகள், 3 விவசாயம் சம்மந்தப்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, அங்கப்பன், நடராஜ், தண்டபாணி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X