புதுச்சேரியின் அடையாளங்கள் நுால் வெளியீட்டு விழா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியின் அடையாளங்கள் நுால் வெளியீட்டு விழா

Added : அக் 14, 2021
Share
புதுச்சேரி-ஓய்வு பெற்ற கல்வித் துறை இணை இயக்குனர் எழுதிய, 'புதுச்சேரியின் அடையாளங்கள்' நுால் வெளியீட்டு விழா நடைபெற்றது.புதுச்சேரியின் காணாமல் போன மற்றும் எஞ்சியுள்ள அடையாளங்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து, அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், 'புதுச்சேரியின் அடையாளங்கள்' என்ற தலைப்பில், கல்வித் துறையின் முன்னாள் இணை இயக்குனர் ராமதாஸ் புத்தகமாக

புதுச்சேரி-ஓய்வு பெற்ற கல்வித் துறை இணை இயக்குனர் எழுதிய, 'புதுச்சேரியின் அடையாளங்கள்' நுால் வெளியீட்டு விழா நடைபெற்றது.புதுச்சேரியின் காணாமல் போன மற்றும் எஞ்சியுள்ள அடையாளங்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து, அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், 'புதுச்சேரியின் அடையாளங்கள்' என்ற தலைப்பில், கல்வித் துறையின் முன்னாள் இணை இயக்குனர் ராமதாஸ் புத்தகமாக தொகுத்துள்ளார்.இந்நுாலில் பழமையான புதுச்சேரியின் கலங்கரை விளக்கம், அங்காடிகள், மணிக்கூண்டுகள், தாவரவியல் பூங்கா, பஞ்சாலைகள், துய்ப்ளெக்ஸ் மாளிகை, அரிக்கமேடு உள்ளிட்ட 15 அடையாளங்களின் முழு வரலாறும் அரிய படங்களுடன், விளக்கப் பட்டுள்ளது.இந்நுால் வெளியீட்டு விழா, லாஸ்பேட்டையில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது. நிறுவன இயக்குநர் சம்பத் வரவேற்றார். ஓய்வுபெற்ற நீதிபதி தாவிது அன்னுசாமி தலைமை தாங்கினார். கலை, பண்பாட்டு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நுாலை வெளியிட்டார்.அந்தோணிசாமி, பேராசிரியர்கள் ராமானுஜம், வெங்கடசுப்புராய நாயகர், எழுத்தாளர் இளம்பாரதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நுாலாசிரியர் ராமதாஸ் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X