பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - தி.மு.க.,வை வீழ்த்திய அதிருப்தி அ.தி.மு.க., வெற்றி பழங்கரையில், கோஷ்டி வேட்பாளர் 'கரை' சேர்ந்த கதை

Added : அக் 14, 2021
Share
Advertisement
அவிநாசி : பழங்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட அதிகாரபூர்வ வேட்பாளர்கள் தோல்வியடைந்த நிலையில், அதிருப்தி அ.தி.மு.க.. வினரின் ஆதரவில், சுயே.. வேட்பாளர் வெற்றி பெற்றார்.சமீபத்தில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், பழங்கரை ஊராட்சியின், 9வது வார்டு உறுப்பினர் தேர்தலில், இந்த


அவிநாசி : பழங்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட அதிகாரபூர்வ வேட்பாளர்கள் தோல்வியடைந்த நிலையில், அதிருப்தி அ.தி.மு.க.. வினரின் ஆதரவில், சுயே.. வேட்பாளர் வெற்றி பெற்றார்.

சமீபத்தில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், பழங்கரை ஊராட்சியின், 9வது வார்டு உறுப்பினர் தேர்தலில், இந்த 'அரசியலை' பார்க்க முடிந்தது. 1,360 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில், 861 ஓட்டுகள் பதிவாகின. சுயேட்சை என்ற அடையாளத்துடன் களமிறங்கிய தங்கபாண்டியன், 381 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்.இவருக்கு பழங்கரை ஊராட்சியின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க.,வை சேர்ந்த செந்தில்குமார், ஆதரவுக்கரம் நீட்டினார். (தற்போது,

அவரது சகோதரி, ஊராட்சி தலைவியாக உள்ளார் என்பது கூடுதல் தகவல்). அதே நேரம், அ.தி.மு.க., ஆதரவில் போட்டியிட்ட சுரேஷ்குமார், 219 ஓட்டுகளை பெற்று, தோல்வியடைந்தார்; அவருக்கு ஆதரவாக, அப்பகுதியில் உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும், ஓட்டு சேகரித்தனர்.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சம்பத்குமார், வெறும், 154 ஓட்டுகளை மட்டுமே பெற்று, மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார். ஆளுங்கட்சியாக உள்ள நிலையிலும், மூன்றாம் இடத்துக்கு அக்கட்சி வேட்பாளர் தள்ளப்பட்டது, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல், அ.தி.மு.க..வின் ஒரு தரப்பினரின் ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில், மறு தரப்பினர், 'அப்செட்' ஆகியுள்ளனர். கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல் மற்றும் எதிர்ப்பு அரசியல் இதன் மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.அரசியல் பயணத்தில், சாதாரண வார்டு உறுப்பினர் தேர்தல் கூட, அதிகாரத்தை நிலைநாட்டும், களமாக மாறிப்போயிருக்கிறது என்றால், அது மிகையல்ல.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சம்பத்குமார், வெறும், 154 ஓட்டுகளை மட்டுமே பெற்று,மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X