பொது செய்தி

இந்தியா

நகர அமைப்பு குழும வாரிய புதிய நிர்வாகிகள் நியமனம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி நகர அமைப்பு குழும வாரியம் மறு சீரமைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி நகர அமைப்பு குழும வாரியத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். கடந்த 2018ம் ஆண்டு நியமிக்கப்பட்ட வாரிய சேர்மன், உறுப்பினர்களின் பதவிக்காலம், கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது.அதைத் தொடர்ந்து, வாரியத்திற்கு புதிய

புதுச்சேரி-புதுச்சேரி நகர அமைப்பு குழும வாரியம் மறு சீரமைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி நகர அமைப்பு குழும வாரியத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். கடந்த 2018ம் ஆண்டு நியமிக்கப்பட்ட வாரிய சேர்மன், உறுப்பினர்களின் பதவிக்காலம், கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது.அதைத் தொடர்ந்து, வாரியத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்க கவர்னர் ஒப்புதல் அளித்தார்.அதன்பேரில், புதுச்சேரி நகர அமைப்பு துறையை கவனிக்கும் அமைச்சர், வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.நகர அமைப்பு குழும செயலாளர், துணை தலைவராகவும், மாவட்ட கலெக்டர், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், சுகாதார துறை இயக்குநர், உள்ளாட்சி துறை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை நகர அமைப்பாளர், வாரியத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதுதவிர அரசு பணி அல்லாத உறுப்பினர்களாக சிவகந்தன், நந்தா ஜெயஸ்ரீதரன், வெங்டேசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை வீட்டு வசதி துறை சார்பு செயலர் ஏழுமலை வெளியிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X