பொது செய்தி

இந்தியா

ஓய்வுபெற்ற ராணுவ கப்பலை புதுச்சேரியில் நிலை நிறுத்த வேண்டும்

Added : அக் 14, 2021
Share
Advertisement
வில்லியனுார்-கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலை புதுச்சேரி கடலில் நிலை நிறுத்த வேண்டும் என, மத்திய ராணுவ அமைச்சருக்கு, அமைச்சர் சாய்சரவணன்குமார் கடிதம் எழுதி உள்ளார்.கார்கில் போரின்போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், இந்திய கடற்படையின், ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலை பயன்படுத்த உத்தரவிட்டார். இதனால் பிரம்மபுத்திரா கப்பல் மீது நாட்டு

வில்லியனுார்-கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலை புதுச்சேரி கடலில் நிலை நிறுத்த வேண்டும் என, மத்திய ராணுவ அமைச்சருக்கு, அமைச்சர் சாய்சரவணன்குமார் கடிதம் எழுதி உள்ளார்.கார்கில் போரின்போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், இந்திய கடற்படையின், ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலை பயன்படுத்த உத்தரவிட்டார். இதனால் பிரம்மபுத்திரா கப்பல் மீது நாட்டு மக்களின் பார்வை திரும்பியது.இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பிரம்மபுத்திரா கப்பல் சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளது.இக்கப்பலை புதுச்சேரி கடலில் நிலைநிறுத்த வேண்டும் என, குடிமைபொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன் குமார், முதல்வர் ரங்கசாமி அனுமதியோடு, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார்.இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் கவனம் ஈர்க்கப்பட்ட பிரம்மபுத்திரா ராணுவ கப்பலை புதுச்சேரிக்கு கொண்டுவந்து கடலில் நிலை நிறுத்தி வைக்க வேண்டும். இதனால் புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சியடைந்து மாநிலத்திற்கு வருவாய் கிடைக்கும், ராணுவ கப்பலை மாணவர்கள் பார்வையிட்டால் அவர்களுக்கு தேசிய உணர்வு அதிகரிக்க வாய்ப்பாக அமையும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X