கனமழையால் சேதமான வீடு | Dinamalar

கனமழையால் சேதமான வீடு

Added : அக் 14, 2021
Share
வில்லியனுார்-கொம்பாக்கத்தில் தொடர் மழையால் சேதமடைந்த வீட்டை சிவா எம்.எல்.ஏ., பார்வையிட்டு, அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.புதுச்சேரியில் தொடர்ந்து சில தினங்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கூரை வீடுகளும் பாதிக்கப்பட்டன.இந்நிலையில் வில்லியனுார் தொகுதி கொம்பாக்கத்தில் மாலதி என்பவரது கூரை வீடு நேற்று

வில்லியனுார்-கொம்பாக்கத்தில் தொடர் மழையால் சேதமடைந்த வீட்டை சிவா எம்.எல்.ஏ., பார்வையிட்டு, அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.புதுச்சேரியில் தொடர்ந்து சில தினங்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கூரை வீடுகளும் பாதிக்கப்பட்டன.இந்நிலையில் வில்லியனுார் தொகுதி கொம்பாக்கத்தில் மாலதி என்பவரது கூரை வீடு நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையினால் இடிந்து விழுந்தது. சேதமான வீட்டை சிவா எம்.எல்.ஏ., பார்வையிட்டு, அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.உரிய நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X