அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய வழிப்பறி கும்பலைச் சேர்ந்த ரவுடி கைது

Added : அக் 14, 2021
Share
Advertisement
வில்லியனுார்-வில்லியனுார் அருகே அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய வழிப்பறி கும்பலை சேர்ந்த பிரபல ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி வேல்ராம்பட்டை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி செங்கொடிபாரதி (37); விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறார்.விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில், சித்தலம்பட்டு அரசு பள்ளி

வில்லியனுார்-வில்லியனுார் அருகே அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய வழிப்பறி கும்பலை சேர்ந்த பிரபல ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி வேல்ராம்பட்டை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி செங்கொடிபாரதி (37); விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறார்.விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில், சித்தலம்பட்டு அரசு பள்ளி வாக்குச்சாவடியில், தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். பணி முடிந்து, 6ம் தேதி நள்ளிரவு வழுதாவூர் வழியாக, புதுச்சேரிக்கு கணவருடன், இருசக்கர வாகனத்தில் வந்தபோது, பிள்ளையார்குப்பம் அருகே வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டார்.வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.இந்நிலையில், அரியாங்குப்பத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த முதியவர் கொலை வழக்கில், சிறை சென்று வெளிவந்த, தேங்காய்திட்டு, புதுநகரை சேர்ந்த அர்ச்சுணன் மகன் விஜய்(20) என்பவரை. போலீசார் பிடித்து விசாரித்தனர்.அதில், தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த கூட்டாளிகள் செல்வமணி, அஜய், முகிலன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பைக் திருடுவது, வழிப்பறியில் ஈடுபட்டு வருவதை ஒப்புக்கொண்டார்.சம்பவத்தன்று பிள்ளையார்குப்பத்தில் வழிப்பறியில் ஈடுபட முயன்றபோது, சுதாரித்து தப்பிச் சென்றதால் கத்தியால் வெட்டியதாக தெரிவித்தார்.அதையடுத்து, போலீசார் நேற்று மாலை விஜய்யை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி செல்வமணி உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X