இந்தியா

போர்க்கொடி: தேர்தல் ஆணையருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள்...நடத்தை விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி-தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 22ம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.வார்டு இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடியை சுட்டிக்காட்டி, சென்னை
 போர்க்கொடி: தேர்தல் ஆணையருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள்...நடத்தை விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

புதுச்சேரி-தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 22ம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.வார்டு இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடியை சுட்டிக்காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குளறுபடிகளை நீக்கி தேர்தலை நடத்திட, கடந்த 5ம் தேதி உத்தரவிட்டனர்.அதனைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, புதிய அட்டவணையை கடந்த 8ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நீதிமன்றம் உத்தரவு

இரு பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை நீக்கியதை கண்டித்து தி.மு.க., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக புதுச்சேரி அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் வரும் 21ம் தேதி பதில் அளிக்க வேண்டும். அதுவரை தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.தொடரும் நடத்தை விதி இருப்பினும், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளது. அடிப்படை பிரச்னை தொடர்பாக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதாக கூறி பணியை தட்டிக் கழித்து வருகின்றனர். அரசின் நலத் திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.,க்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை.எம்.எல்.ஏ.,க்கள் மனுஇந்நிலையில், நேற்று பிற்பகல் 12:30 மணி அளவில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் 20 பேர், ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் தாமசை சந்தித்தனர்.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தியாகராஜன், காங்., வைத்தியநாதன், என்.ஆர்.காங்., லட்சுமிகாந்தன், ரமேஷ், பாஸ்கரன், ஆறுமுகம், பா.ஜ., கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், அசோக்பாபு, வெங்கடேசன், ராமலிங்கம், சுயேச்சைகள் பி.ஆர்.சிவா, நேரு, பிரகாஷ்குமார், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை 21ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப் பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும். இனி தேர்தல் அறிவிப்பதற்கு முன், அனைத்து கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்தி தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி, மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் தாமஸ், 'உயர்நீதிமன்ற உத்தரவில் தேர்தல் நடத்தை விதி பற்றி எதுவும் கூறவில்லை. 'சட்டத் துறையில் விளக்கம் பெற்றே தேர்தல் நடத்தை விதி தொடரப்படுகிறது' என்றார். இதற்கு, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதா அல்லது திரும்ப பெறப்படுமா என்பதை எழுத்து பூர்வமாக வழங்குமாறு கோரினர்.ஆணையம் விளக்கம்நீண்ட ஆலோசனைக்குப் பின், 'தேர்தல் நடத்தை விதிகளை தொடர்வதா, இல்லையா என்பது குறித்து சட்டத்துறையினருடன் மீண்டும் ஆலோசித்து இன்று (நேற்று) மாலைக்குள் பதில் கொடுக்கப்படும். இட ஒதுக்கீடு குறித்து அரசு, அரசாணை வெளியிட்டால் கட்டாயம் தேர்தலில் பின்பற்றப்படும்.

மேலும், இனி வரும் காலங்களில் தேர்தல் அறிவிப்பதற்கு முன், அனைத்து கட்சியினருடன் கலந்து ஆலோசித்து, தேர்தல் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும்' என, மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் கூறினார். அதனையேற்று, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பகல் 1:50 மணிக்கு தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X