பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் ஆலோசனை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் ஆலோசனை

Added : அக் 14, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரியில், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொற்று குறைந்ததை தொடர்ந்து, செப்., 1ம் தேதியில் இருந்து, 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் வரும் நவ.1 ம் தேதியில் இருந்து, ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்

புதுச்சேரி-புதுச்சேரியில், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொற்று குறைந்ததை தொடர்ந்து, செப்., 1ம் தேதியில் இருந்து, 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் வரும் நவ.1 ம் தேதியில் இருந்து, ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.டிசம்பர் மாதம் தேர்வு நடத்தவும், மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம், நேற்று கல்வித்துறை செயலர் அசோக்குமார், இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள், 2ம் தேதி கல்லறை திருவிழா, 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், அதற்கு முன் பள்ளிகள் திறப்பதா அல்லது, தீபாவளிக்கு பிறகு திறப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X