சம்ப் தொட்டியில் இறந்து கிடந்த பியூட்டி பார்லர் ஊழியர் | Dinamalar

சம்ப் தொட்டியில் இறந்து கிடந்த பியூட்டி பார்லர் ஊழியர்

Added : அக் 14, 2021
Share
புதுச்சேரி-பியூட்டி பார்லர் ஊழியர் வீட்டின் சம்ப் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.மேட்டுப்பாளையம் தர்மாபுரி கலைவாணர் வீதியை சேர்ந்தவர் முருகன்,47. இவரது அண்ணன் மகன் அருண்,25. சிறு வயதில் பெற்றோர் பிரிந்து சென்றதால், முருகன் வீட்டில் வளர்ந்து வந்தார்.கடந்த மூன்று ஆண்டுகளாக புதுச்சேரி எஸ்.வி., பட்டேல் சாலையில் உள்ள பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வந்தார்.

புதுச்சேரி-பியூட்டி பார்லர் ஊழியர் வீட்டின் சம்ப் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.மேட்டுப்பாளையம் தர்மாபுரி கலைவாணர் வீதியை சேர்ந்தவர் முருகன்,47. இவரது அண்ணன் மகன் அருண்,25. சிறு வயதில் பெற்றோர் பிரிந்து சென்றதால், முருகன் வீட்டில் வளர்ந்து வந்தார்.கடந்த மூன்று ஆண்டுகளாக புதுச்சேரி எஸ்.வி., பட்டேல் சாலையில் உள்ள பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பினார். நேற்று அதிகாலை 7.௦௦ மணியளவில் பார்த்தபோது வீட்டின் 6 அடி ஆழம் கொண்ட சம்ப் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X