பொது செய்தி

இந்தியா

பனித்திட்டில் மீன்பிடி துறைமுகம் முதல்வர் ரங்கசாமி ஆய்வு

Added : அக் 14, 2021
Share
Advertisement
பாகூர்-பனித்திட்டு கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார்.ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பனித்திட்டு மீனவ கிராமத்தில், கடந்த காங்., ஆட்சியின் போது, 70 கோடி ரூபாய் செலவில், மீன்பிடி துறைமுகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான கோப்புக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பாகூர்-பனித்திட்டு கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார்.ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பனித்திட்டு மீனவ கிராமத்தில், கடந்த காங்., ஆட்சியின் போது, 70 கோடி ரூபாய் செலவில், மீன்பிடி துறைமுகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான கோப்புக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று பனித்திட்டு கிராமத்திற்கு சென்று கடற்கரை முகத்துவார பகுதியை பார்வையிட்டனர். மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தினர். சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தன், பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், மீன்வளத் துறை, துறைமுகத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், 'பனித்திட்டு மற்றும் காரைக்கால் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் உள்ளது. பனித்திட்டில் மீன்பிடி துறைமுக திட்டத்திற்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு ஏற்கனவே கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் கடல் மேலாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, ஒப்புதல் அளித்து விட்டால், மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி துவக்கப்படும். இதன் மூலமாக, பனித்திட்டு, நரம்பை, புதுக்குப்பம் மற்றும் அதனையொட்டி உள்ள கிராம மக்கள் பயன்பெறுவர்' என்றார். முன்னதாக, மீனவர்களின் கோரிக்கையின்பேரில், நல்லவாடு பகுதியில் துறைமுகம் அமைப்பது குறித்து நேற்று முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார். நல்லவாடு முகத்துவாரம், உப்பனாறு வாய்க்கால் பகுதியை முதல்வர் பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X