பொது செய்தி

இந்தியா

இட ஒதுக்கீடு குளறுபடிகளை களைய அரசுக்கு மாஜி எம்.பி., ஆலோசனை

Added : அக் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'இட ஒதுக்கீடு குளறுபடிகளை களைந்து, ஜனவரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்' என மாஜி எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.புதுச்சேரி மேற்கு அ.தி.மு.க., அவைத் தலைவரும் முன்னாள் எம்.பி.,யுமான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீடு மற்றும் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள பதில்கள் அடிப்படையில்

புதுச்சேரி-'இட ஒதுக்கீடு குளறுபடிகளை களைந்து, ஜனவரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்' என மாஜி எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.புதுச்சேரி மேற்கு அ.தி.மு.க., அவைத் தலைவரும் முன்னாள் எம்.பி.,யுமான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீடு மற்றும் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள பதில்கள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவது துரதிர்ஷ்டமானது. இத்தருணத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவது நல்லதல்ல. அரசியல் கட்சிகளும், புதுச்சேரி அரசும், மாநில தேர்தல் ஆணையமும் ஒருங்கிணைந்து, தொகுதி சீரமைப்புக்கு புதிய குழுவை நியமிக்க வேண்டும்.இக்குழு 2016ம் ஆண்டு குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, அவற்றில் உள்ள குறைகளை கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளின் வார்டுகளை சீரமைக்க வேண்டும்.அதன்படி பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், அட்டவணை இனத்தவர், பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.தேவைப்பட்டால், 2021ம் ஆண்டிற்கான உத்தேச மதிப்பீட்டு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து தனது பணியை முடிக்கலாம்.45 நாட்களுக்குள் இப்பணியை முடித்து அதனை அரசு, அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் ஆணையத்திற்கு முன் சமர்ப்பித்து ஒப்புதலை பெற வேண்டும். அதன் பிறகு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை ஜனவரி 4வது வாரத்தில் நடத்தி முடிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X