பொது செய்தி

இந்தியா

'கொரோனா மூன்றாம் அலையை தடுக்க தடுப்பூசி அவசியம்'

Added : அக் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'இரண்டு வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதுல் வழங்கியுள்ளது' என கவர்னர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியை நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கோரிமேடு, ஞானதியாகு நகர், மாரியம்மன் கோவிலில் தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது.முகாமை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார்.

புதுச்சேரி-'இரண்டு வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதுல் வழங்கியுள்ளது' என கவர்னர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியை நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கோரிமேடு, ஞானதியாகு நகர், மாரியம்மன் கோவிலில் தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது.முகாமை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார். எம்.எல்.ஏ., ஆறுமுகம், சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு உடனிருந்தனர்.கவர்னர் அளித்த பேட்டி:புதுச்சேரியில் இதுவரை 80 சதவீதம் பேர் முதல் டோஸ் மற்றும் 35 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மொத்தம் 10 லட்சத்திற்கு அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பொது மக்களில் சிலர் இப்போதுதான் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகின்றனர். தடுப்பூசி குறித்து இன்னும் விழிப்புணர்வு தேவை.80 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் கொரோனா 3ம் அலை தடுக்கப்பட்டுள்ளது. அக்டோர் மாத கடைசியில் மூன்றாம் அலை வரலாம் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு 3ம் அலையை தடுக்க வேண்டும்.தடுப்பூசி போடாமல் நோய் தொற்றை ஏற்படுத்தினால் அது மன்னிக்க முடியாத குற்றமாக கருதுகிறேன் உலகில் முதல் முதலாக 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 18 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு கவர்னர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X