மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தீக்குளித்து தற்கொலை

Added : அக் 14, 2021
Share
Advertisement
காரைக்கால் -காரைக்காலில் மனைவி பிரிந்து சென்றதால் தீக்குளித்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். காரைக்கால் நெடுங்காடு மேலகாசாக்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்(34). இவரது மனைவி செல்வராணி; மகள் வைஷ்ணவி(10). வாடகை வீட்டில் வசித்துவந்த நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி, கணவன் ராஜு மீது போலீசில் புகார் கொடுத்தார். கைது

காரைக்கால் -காரைக்காலில் மனைவி பிரிந்து சென்றதால் தீக்குளித்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். காரைக்கால் நெடுங்காடு மேலகாசாக்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்(34). இவரது மனைவி செல்வராணி; மகள் வைஷ்ணவி(10). வாடகை வீட்டில் வசித்துவந்த நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி, கணவன் ராஜு மீது போலீசில் புகார் கொடுத்தார். கைது செய்யப்பட்ட ராஜு, ஜாமினில் வெளி வந்தார்.இதை தொடர்ந்து தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் கடந்த செப்., 25ம் தேதி குடிபோதையில் ராஜு தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். பலத்த காயம் அடைந்த அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நிரவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X