விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற பஞ்., ஆணையர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற பஞ்., ஆணையர் ஆய்வு

Added : அக் 14, 2021
Share
திருக்கனுார்-மணலிப்பட்டில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை உயர்த்தி அமைக்கப்பட்டதால், விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற ஆணையர் எழில்ராஜன் ஆய்வு மேற்கொண்டார்.மண்ணாடிப்பட்டு தொகுதி மணலிப்பட்டு சுடுகாட்டிற்கு செல்லும் சாலையின் இருபுறமும் விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் மழை காலங்களில் தேங்கும் தண்ணீர், இச்சாலையின் குறுக்கேயுள்ள தாழ்வான பகுதி வழியாக

திருக்கனுார்-மணலிப்பட்டில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை உயர்த்தி அமைக்கப்பட்டதால், விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற ஆணையர் எழில்ராஜன் ஆய்வு மேற்கொண்டார்.மண்ணாடிப்பட்டு தொகுதி மணலிப்பட்டு சுடுகாட்டிற்கு செல்லும் சாலையின் இருபுறமும் விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் மழை காலங்களில் தேங்கும் தண்ணீர், இச்சாலையின் குறுக்கேயுள்ள தாழ்வான பகுதி வழியாக வெளியேறி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் சுடுகாட்டு சாலையில் மண் கொட்டி உயர்த்தப்பட்டது. கடந்த இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஏரி உபரி நீர் மற்றும் மழைநீர் வெளியேற வழியின்றி, அப்பகுதி விவசாய நிலத்தில் தேங்கி நிற்கிறது. சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் அளித்த புகாரின் பேரில், மண்ணாடிப்பட்டு ஆணையர் எழில்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விவசாய நிலத்தில் மழைநீர் மற்றும் ஏரி உபரி நீர் தேங்குவதை தடுக்க, சுடுகாட்டிற்கு செல்லும் சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எழில்ராஜன் கூறினார்.ஆய்வின்போது, கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனா உடனிருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X