மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளால் விபத்து அபாயம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
பாகூர்-பிள்ளையார்குப்பம் கிராமத்தில், மின் கம்பங்களின் மீது, செடி, கொடிகள் படர்ந்துள்ளதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற் சாலைகள் உள்ளன.இங்குள்ள மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. பிள்ளையார்குப்பம் - கிருமாம்பாக்கம் சாலையில் மின் கம்பிகளின் மீது மர

பாகூர்-பிள்ளையார்குப்பம் கிராமத்தில், மின் கம்பங்களின் மீது, செடி, கொடிகள் படர்ந்துள்ளதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற் சாலைகள் உள்ளன.இங்குள்ள மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. பிள்ளையார்குப்பம் - கிருமாம்பாக்கம் சாலையில் மின் கம்பிகளின் மீது மர கிளைகள் படந்து கிடக்கிறது. தாய் சேய் நல மையம், சமுதாய நலக் கூடம் அருகே உள்ள மின் கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது இதனால், அப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது.தற்போது மழை காலம் என்பதால், மரங்கள் மற்றும் மின் கம்பங்களின் அருகில் செல்வோரும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும், மின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, பிள்ளையார்குப்பத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்சார கேபிள்களின் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றிட மின்துறை உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X