பல்லடம் : பால் வியாபாரி ஒருவர், திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.பல்லடம் அருகே கரைப்புதுார் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், 58. பால் வியாபாரியான அவர் கூறியதாவது:ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். தந்தையுடன் இணைந்து,
சிறு வயதிலேயே பால் விற்பனை செய்தேன். கடந்த, 43 ஆண்டுகளாக பால் வியாபாரம் செய்து வருகிறேன்.தொழில் காரணமாக திருச்சிக்கு சென்று, அங்கு பால் வியாபாரம் செய்தோம். 1980ல் புதுக்கோட்டை மகாராஜா வீரரகுநாத தொண்டைமான் வாரிசுகள் இருந்தபோது, அரண்மணைக்கும் பால் ஊற்றி உள்ளேன். அப்போது, லி., 50 பைசாவுக்கும் குறைவாக இருந்தது. அந்த காலத்தில், பைசா கணக்கில் மட்டுமே விலை உயர்த்தப்படும்.
பஞ்சம் தீர்ந்த பின் மீண்டும் இங்கு வந்து பால் வியாபாரம் செய்து வருகிறேன். மரத்தின் மீது மிகவும் ஆர்வம் உண்டு. அதேபோல், திருக்குறள் மற்றும் அதன் கருத்துக்கள் மிகவும் பிடிக்கும் என்பதால், பால் விற்பனைக்கு செல்லும்போது, தினசரி ஒவ்வொரு திருக்குறள் மற்றும் அதன் பொருள் விளக்கத்துடன் டூவீலரின் முன்பக்கம் ஒட்டி வைப்பது வழக்கம். இதை பார்த்து பலரும் பாராட்டுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement