பொது செய்தி

இந்தியா

நடத்தை விதிமுறைகளை திரும்பப் பெற கோரிக்கை

Added : அக் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி -உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனதால் நன்னடத்தை விதிமுறைகளை திரும்பப் பெறவேண்டும் என சிந்தனையாளர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை தலைவர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை:மாநில தேர்தல் ஆணையத்தின் தவறான அணுகு முறையால் இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போய் உள்ளது.தேர்தல் தள்ளிபோய்விட்டதால் தற்போது நடைமுறையில்

புதுச்சேரி -உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனதால் நன்னடத்தை விதிமுறைகளை திரும்பப் பெறவேண்டும் என சிந்தனையாளர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை தலைவர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை:மாநில தேர்தல் ஆணையத்தின் தவறான அணுகு முறையால் இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போய் உள்ளது.தேர்தல் தள்ளிபோய்விட்டதால் தற்போது நடைமுறையில் உள்ள நன்னடத்தை விதிகளை உடனே திரும்பப்பெற வேண்டும். நன்னடத்தை விதிகளைக் காரணம் காட்டி, அரசு அதிகாரிகள் மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர மறுக்கின்றனர்.பண்டிகை காலத்தில் தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி மக்களுக்கு கிடைக்க வேண்டியவை மறுக்கப்படுகின்றது. எனவே கவர்னர் தலையிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகளை உடனே திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X