பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் கருவிகள் தயாரிப்பு தீவிரம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், வடமாநில தொழிலாளர்கள் வேளாண் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகளுக்கு கோடாரி, அரிவாள், கொத்து உள்ளிட்ட பல்வேறு வேளாண் உபகரணங்கள் தேவைப்படுகிறது.இந்நிலையில், மழை பெய்வதால் விளைநிலங்களில், வரப்பு உயர்த்துதல், வட்டப்பாத்தி எடுத்தல், களைகள்
 வேளாண் கருவிகள் தயாரிப்பு தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், வடமாநில தொழிலாளர்கள் வேளாண் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது.

விவசாயிகளுக்கு கோடாரி, அரிவாள், கொத்து உள்ளிட்ட பல்வேறு வேளாண் உபகரணங்கள் தேவைப்படுகிறது.இந்நிலையில், மழை பெய்வதால் விளைநிலங்களில், வரப்பு உயர்த்துதல், வட்டப்பாத்தி எடுத்தல், களைகள் அகற்றும் பணிகள் நடக்கிறது. தற்போது, பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், மத்தியபிரதேசம் பகுதிகளில் இருந்து வந்த தொழிலாளர்கள், குடும்பங்களாக தங்கி, வேளாண் மற்றும் வீட்டு உபயோக கருவிகள் தயாரித்து வருகின்றனர்.குறைந்த விலைக்கு கருவிகளை விற்பனை செய்வதால், மக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் இவர்களிடம் உபகரணங்களை வாங்கிச்செல்கின்றனர். தற்போது, வேட்டைக்காரன்புதுார், ஆனைமலை, வஞ்சியாபுரம் பிரிவு, கிணத்துக்கடவு, உள்ளிட்ட பல இடங்களில் கருவிகள் தயாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X